Singathology

Home > Other > Singathology > Page 42
Singathology Page 42

by Gwee Li Sui


  “எதுக்கு…?”

  “கனிந்திருக்கும் நாவல் கனிகளைக் கடித்துத் தின்னத்தான்…!” என்றது.

  கிழக்கிளி முகத்தைத் திருப்பிக் கொண்டு, “எனக்குப் பசி இல்லே. எனக்குப் பழம் வேண்டாம்…!” என்றது.

  “வயசான காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது. அது உடம்புக்கு நல்லது இல்லே. நீ இப்பவே எலும்பும் தோலுமாக இருக்கிறே...! இனி மேலும் பட்டினி கிடக்கக் கூடாது. கிடந்தால் காற்றில் பறக்கும் நீ காற்றாய்ப் பறந்து விடுவே…!” என்றது.

  “நான் காற்றோடு காற்றாய் கலந்து போகத்தான் ஆசைப்படுறேன்! இனி உயிரோடு இருக்க விரும்பலே…!”

  “ஏன் இப்படிச் சொல்லுறே...?”

  “பின்னே எப்படிச் சொல்லச் சொல்லுறே …? இதோ இந்தக் கிளி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சொல்லியதைப் போல ஒரே அடியாய் பொந்துக்குள் கண்ணை மூடிடச் சொல்லுகிறாயா...? இல்லே, வல்லூற்றின் வாய்க்குள் தலையைக் கொடுத்துத் தற்கொலை செய்துகொள்ளச் சொல்கிறாயா...? என்ன செய்யச் சொல்லுறே...? சொல்லு…!” என்றது. அதே நேரத்தில் தடுமாறவும் செய்தது. மரப்பட்டையைப் பற்றிக்கொண்டிருந்த அதன் கால் நகங்களின் பிடி தளர்ந்தது. பட்டையின் சிதறல்கள் கீழே விழ கால்கள் சறுக்கின. அதனால் கால்களை உறுதியாக ஊன்றிக்கொண்டு நிற்க முடியவில்லை. உடல் நடுங்கியது. அதைப் பார்த்ததும் இளங்கிளி பதறி விட்டது. உடனே கிழக்கிளியை வலப் பக்க இறக்கையால் அணைத்துப் பிடித்துக்கொண்டு,

  “இதுக்குத்தான் பட்டினி கிடக்கக் கூடாதுனு சொல்லுறது. இப்பப் பார்த்தாயா உன்னால் கால்களை உறுதியாக ஊன்றிக்கொண்டு நிற்க முடியலே...! உடல் நடுங்குது…!” என்று சொல்லி விட்டு மேலே அண்ணாந்தும் பார்த்தது.

  பறந்து பறந்து பழங்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்த இளங்கிளிகளைப் பார்த்தது.

  “தின்னிக் கிளிங்களா…! உங்க வயிற்றுக்கு மட்டும் கொட்டிக்கொள்ளுறீங்களே…! ‘நம்ம கிழக்கிளி பழம்கிழம் தின்னுச்சா’னு பார்த்தீங்களா...? அதை மறந்துட்டீங்களே…! இப்ப அது இங்கே இருக்கு. அதனால் எழுந்து நிற்க முடியலே! தடுமாறுது…! உடம்பும் ‘வெடவெட’னு ஆடுது! உடனே பறந்து வாங்க...!” என்று உரத்த குரலில் கத்தியது.

  வாய்க்கும் வயிற்றுக்குமாக இருந்த இளங்கிளிகள் பதறிவிட்டன. “நம் கிழக்கிளிக்கு என்னவோ ஆயிடுச்சாம்...! வாங்க வாங்க! போய்ப் பார்ப்போம்…!” என்று கத்திக்கொண்டே அரக்கப் பரக்கப் பறந்து வந்தன. அருகில் வந்ததும் சோர்வாக இருந்த கிழக்கிளியைப் பார்த்தன.

  ஒரு கிளி இறக்கைகளை ஒடுக்கிக்கொண்டு கிழக்கிளியின் இடப் பக்கமாகப் போய் அமர்ந்தது. தாம் கவ்வி வந்த பழத் துண்டைக் கிழக்கிளியின் வாயில் வைத்து ஊட்டிவிட முயன்றது. ஆனால், கிழக்கிளி வாயைத் திறக்கவில்லை. மூடி இருந்த அலகுகளைத் திறக்க மறுத்தது. பழம் இருந்தும், பசி இருந்தும் பழங்கிளிக்குப் பசியாற மனம் இல்லை. ஆனால், அணைத்துப் பிடித்துக்கொண்டு நின்ற இளங்கிளி வெறுமனே இருந்துவிடவில்லை. தம் அலகுகளின் நுனியைக் கிழக்கிளியின் அலகுகளுக்குள் நுழைத்து நெம்பியது. “திற…!”என்றும் சொல்லியது. கிழக்கிளியின் அலகுகள் திறந்து கொண்டன. ‘அது எப்போது வாயைத் திறக்கும்’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிளி தாம் கவ்வி இருந்த பழத்தை உடனே கடித்துச் சாற்றைப் பிளிந்தது. அது மேல் கொப்பில் இருந்து பிழிந்ததால் சாறு நேராக கிழக்கியினின் வாயில் விழுந்தது. கிழக்கிளியால் அந்தச் சாற்றைத் துப்ப முடியவில்லை. பழச்சாறு நேராக வாய்க்குள் சொட்டுச் சொட்டாக விழுந்து கிழக்கிளியின் தொண்டையை நனைத்தது. வயிறும் பழமுதிர்ச் சோலையாகக் குளிர்ந்தது.

  நடந்ததைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளங்கிளி, “அப்பாடா... பழச்சாற்றைக் குடிச்சிடுச்சு…! இனிப் பயமில்லே …!” என்று சொல்லிவிட்டு அதற்குப் பக்கத்தில் இருந்த கிளியின் இறக்கை நுனியைக் கவ்வி மெதுவாக இழுத்து விட்டு, ‘வா’ என்பதைப் போல் கண்களைச் சிமிட்டிச் சைகை காட்டியது. அந்தக் கிளிக்கு ஒன்றும் புரியவில்லை.

  அது மெதுவாக, “ஏன்…?” என்று கேட்டது.

  “வா சொல்லுறேன்…!”

  இரண்டு இளங்கிளிகளும் சற்று
தள்ளிச் சென்று ஒரு கிளையில் அமர்ந்தன.

  “இப்ப நாம் நம் கிழக்கிளியைக் காப்பாற்றி விட்டோம்…! ஆனா, இனி எப்போதும் இப்படிக் காப்பாற்ற முடியுமா...?” என்று கேட்டது.

  “ஏன் இப்படிக் கேட்கிறே…?”

  “கொஞ்சம் அயர்ந்தாலும் அது நம்மை விட்டுப் பறந்து போய்விடும்…! அப்புறம் திரும்பியே வராது…!”

  “ச்ச்ச்சே…! அது நம்மை விட்டுப் பிரியவே கூடாது! அது நீண்ட நாள் நம்கூடவே வாழணும்…!”

  “அப்படினா அண்டங்காக்கை அதனிடம் ‘சொல்லியது என்ன’னு நாம் தெரிந்துகொள்ள வேணும்…!”

  “அது எப்படி முடியும்…?”

  “அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. நம் கிழக்கிளியின் தலைமுறைக் குருவிகளான மீன்கொத்திக்குருவியையும், தூக்கணாங்குருவியையும் நாம் போய்ப் பார்க்க வேணும். பார்த்து அண்டக்காக்கை நம் கிழக்கிளியிடம் சொல்லியதைத் தெரிந்துகொள்ள வேணும்…!”

  “அது எப்படி முடியும்…?”

  “நம் கிழக்கிளியிடம் சொல்லியதை அந்தக் குருவிகளிடம் அண்டக்காக்கை சொல்லி இருக்கும்…! ஏன்னா அந்தக் குருவிங்க எல்லாம் ஒரே தலைமுறைக் குருவிங்க! அதனால் கட்டாயம் சொல்லி இருக்கும்…!”

  “சொல்லி இருந்தாலும் அந்தக் குருவிங்களும் அதை நினைத்துக் கவலைப்படத்தானே செய்யுங்க. அப்படி இருக்கும் போது நம்மிடம் எப்படிச் சொல்லுங்க...?”

  “அந்தக் குருவிங்க கவலையாக இருந்தாலும் நாம் பேச்சுக் கொடுத்து வாயைக் கிளர வேண்டும். கிளரினால் ஒரு குருவியாகிலும் கவலையை மறந்துவிட்டுச் சொல்லிவிடும்...!” என்று கழுத்தை தோள்பட்டைக்குள் இழுத்துக்கொண்டு சிரித்தது.

  “கவலையை மறந்து சொல்லுங்களா…?”

  “சொல்லுங்க…! எனக்கு நம்பிக்கை இருக்கு…!”

  “அப்படினா கிளம்பு…!”

  இரண்டு கிளிகளும் கிழக்கிளியின் தலைமுறைக் குருவிகள் இருக்கும் திசையை நோக்கிப் பறந்தன. அந்தக் கிளிகள் பறந்து சென்றதை இளங்கிளிகள் கவனிக்கவில்லை.

  கிழக்கிளியின் மயக்கமும் தெளிந்தது. தன்னை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த இளங்கிளியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளத் திமுறியது.

  அதை உணர்ந்த இளங்கிளியின் பிடி தளர்ந்ததும் கிழக்கிளி சிறகுகளை விரித்துக்கொண்டு நெட்டி முறித்தது.

  அப்போது ‘படபட’வென இறக்கைகளை அடித்துக்கொள்ளும் ஓசை ஒலித்தது. எல்லாக் கிளிகளும் ஓசை வந்த திசையைப் பார்த்தன. ஓர் இளங்கிளி தட்டுத்தடுமாறி பறந்து வந்தது. கிழக்கிளியின் எதிரே உள்ள ஒரு கொப்பில் அமர முயன்றது. அந்தக் கிளியால் உடலை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு அந்தக் கொப்பில் அமர முடியவில்லை. இறக்கைகளை விரித்தபடியே அந்தக் கொப்பில் ‘தொப்’பென்று விழுந்தது. கொப்பில் உள்ள இலைதழைகள் அதைத் தாங்கிக்கொண்டதால் அதற்கு அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால், அந்தக் கூண்டுக்கிளி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

  எதிர்பாராமல் அந்தக் கிளி அங்கு வந்து விழுந்ததைப் பார்த்ததும் அங்கிருந்த எல்லாக் கிளிகளும் அதிர்ச்சி அடைந்தன.

  “இந்தக் கிளியை இதுக்கு முன் பார்த்தது இல்லேயே…! இது எங்கே இருந்து வந்திருக்கும்னும் தெரியலேயே…!”

  “இந்த கிளியின் இறகுகளைப் பார்த்தாயா...? கறையான் அரித்ததைப் போல இருக்கு…!”

  “இப்ப அதுவா முக்கியம்…? முதலில் இந்தக் கிளியைத் தூக்கி உட்கார வையுங்க…! முதல் உதவி செய்யுங்க…!”

  எல்லாக் கிளிகளும் பேச்சை நிறுத்திவிட்டு உதவி செய்யத் தொடங்கின. ஓர் இளங்கிளி அந்தக் கிளியின் இறக்கையைப் பிடித்து தூக்கி கொப்பில் சரியான நிலையில் உட்கார வைத்தது. இன்னொரு கிளி பின்னி இருந்த இறகுகளைச் சரி செய்து நீவி விட்டது.

  சற்று நேரத்தில் பழங்கள், கொட்டைகள், தானியங்கள் என்று வந்து குவிந்தன.

  அவற்றைப் பார்த்ததும் கூண்டுக்கிளியால் நம்ப முடியவில்லை. ‘அறிமுகம் இல்லாத நமக்கு இந்த இளங்கிளிகள் இப்படி உதவி செய்துங்களே! கொட்டைகளையும் கொண்டு வந்து குவிக்குதுங்களே’ என்று எண்ணி வியந்தது.

  அதே நேரத்தில் எதிரே இருந்த கிழக்கிளியையும் பார்த்தது. உற்றுப் பார்த்தது. அது முகத்தை�
�் தொங்கப் போட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் தலையைச் சாய்த்தும் பார்த்தது. கிழக்கிளி எதையும் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அது ஆடாமல் அசையாமல் இருந்தது.

  அது இருக்கும் நிலையைப் பார்த்து, “நீ ஏன் ‘உம்’னு இருக்கிறே…?” என்று கேட்டது.

  கிழக்கிளி பேசவில்லை. கண்களை சிமிட்டி விட்டு அதைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

  கிழக்கிளிக்குப் பக்கத்தில் இருந்த கிளி, “இப்ப இது பேசும் நிலையில் இல்லே…!” என்றது.

  “பேசும் நிலையில் இல்லேயா...? ஏன்…! வாயில் ஏதாகிலும்…!”

  “ச்சச்சே! அப்படி ஒண்ணும் இல்லே! பசி மயக்கத்தில் இருந்து இப்பத்தான் விடுபட்டிருக்கு…!”

  “பசி மயக்கத்தில் இருந்துச்சு...? இப்பத்தான் விடுபட்டுச்சா…? ஏன் பசியோடு இருந்துச்சு...? இங்கேதான் எல்லாம் இருக்கே…! விரும்பியதைத் தின்ன வேண்டியதுதானே…!”

 

‹ Prev