Singathology

Home > Other > Singathology > Page 20
Singathology Page 20

by Gwee Li Sui


  As I lay my hand on my father’s head of white hair, he stirred lightly in his sleep, letting out a small noise, a little cry. He did not wake up. I held my hand out to him, and, for a long moment, I imagined the thoughts running through his mind, thoughts that converged with mine at times when they came to my mother, but mostly following their own logic, their own outcomes, into places only he would know, dark, oceanic places, aching with a life of its own. I knew I would never know what went on there, in this secret place inside my father, but I also knew that he would not be alone with it. I would watch over him, and I would wait for him, just as he had done, watching over me, waiting for me, waiting for me to surface, once again.

  家居琐事

  作者:淡莹

  一

  院子里的鹧鸪

  正啄吃阳光

  我赶紧把衣服投进洗衣机

  深怕阳光被啄吃完

  衣服还未干透

  二

  神奇魔帚所经之处

  尘埃一扫而空

  赤足踩下

  光溜爽净

  唯有布满心中的厚厚杂念

  试过各种牌子的清洁剂

  擦来拭去

  都不见消除

  芸芸众生中

  我乃一介俗女子

  一辈子不能挣脱

  七情六欲

  三

  夕阳西下

  我到门前扫落叶

  轻薄的九重葛花瓣

  飘满停车位

  扫着扫着

  连同无限心事

  不知不觉扫作一堆

  一并倒进垃圾桶里

  四

  心不在焉,我

  一边折叠衣裳

  一边筛选往事

  衣裳折叠整齐

  一一分类

  收进衣橱里

  往事筛选剩下三种

  第一种绝不犹豫

  自记忆中彻底删除

  第二种好比衣裳

  经常从衣橱、抽屉翻出来

  穿上 晒晒太阳

  回味回味

  第三种锁在隐秘角落

  禁止碰触

  不小心碰触了

  全身立即染满鲜血

  午夜梦回时刻

  Household Trivialities

  BY DAN YING

  Translated by Jeremy Tiang

  1

  The courtyard fowls

  Are pecking at the sunlight

  So I hurry the laundry into the machine

  Afraid the sunlight will all be eaten

  Before my clothes are dry

  2

  Wherever the magic mop has passed

  There’s not a speck of dust

  Beneath bare feet

  So smooth and clean

  Only the jumbled thoughts filling my heart

  That I’ve tried various brands of cleansers on

  And rubbed away at

  Refuse to disappear

  Among the mass of humanity

  I am one more mortal woman

  And in my lifetime cannot escape

  Desires and appetites

  3

  The sun sets

  And I sweep fallen leaves from our door

  Frail bougainvillea petals

  Cover the driveway

  I sweep and sweep

  My endless worries too

  And when I notice they are piled up

  Toss them into the bin

  4

  Distracted, I

  Fold clothes and

  Sieve through past events

  The garments are neatly piled

  And sorted

  Placed in the wardrobe

  Memories fall into three piles

  The first is straightforward

  To be completely eliminated

  The second is like my clothes

  To be often taken from cupboards or drawers

  And worn in sunlight

  In reminiscence

  The third is locked in a secret corner

  No touching allowed

  And if I do bump into it

  My whole body is covered in blood

  A midnight dream of recollection

  பேதங்கள்

  எழுதியவர்: இராம. கண்ணபிரான்

  “பிரசன்னா கண்ணு, சௌக்கியமா இருக்கியா? பரிட்சைய நல்லா எழுதியிருக்கியா? ம்.. சிறப்பாத்தான் நீ செஞ்சிருப்பே.”

  “உடம்புக்கு எந்தக் குறையும் இல்லேம்மா. பரீட்சையிலே வெளுத்து வாங்கியிருக்கேன். நான் அவசரமா இப்போ உனக்குப் போன் போட்டது எதுக்குத் தெரியுமா? வர்ற சனிக்கிழமை ‘ஆர் ஜே ட்வெண்டி டூ பிளைட்’ லே நான் சிங்கப்பூர் வரேம்மா.”

  “என்ன கண்ணு பிரசன்னா, அடுத்த வாரம் வர்றதா போன தடவ பேசினப்ப சொன்னே, இன்னும் ரெண்டு நாளுக்குள்ளே உனக்கு நான் எப்படிக் ‘கிராண்டா ரிசெப்ஷன்’ செய்யறது? எனக்குத் தலைய சுத்துது!”

  “உன்னாலேயா அம்மா சமாளிக்க முடியாது? உன்னோட ஹௌஸ் மெய்ட், பர்சனல் செக்ரிடரி, ரிலையபில் அட்வைசர் – ஆல் இன் ஒன் ‘நரசம்மாள் இருக்காளே! அவள வைத்து எதையும் நீ முடிச்சிடுவியே. அவர்கூட இந்தப் ‘பிளே’னிலேதான் வர்றாரு. அவர் புறப்படறதாலேதான் என் பயணத்தை முன்னாடி மாத்திக்கி்ட்டேன்.”

  “சுரேஷும் உன்னோட கிளம்புதா? அப்போ இன்னும் ‘ஸ்ட்ராங்கா’ நான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யணுமே! உன் அம்மாவுக்கு ஏற்கெனவே இருக்கிற ‘ஹை பிளட் பிரஷ’ரோட இந்தமாதிரி ‘டென்ஷன் பிரஷ’ரையும் திடீரென்று கொடுக்கிறீயே பிரசன்னா? இப்போ நீ சொன்ன பிரயாணத்திலே மறுபடியும் மாற்றம் இருக்காதில்லே, சரி, அப்போ வைச்சுடட்டுமா? வேற சேதி ஒண்ணும் இல்லியே?”

  இலண்டனில் இருந்த தன் மகள் பிரசன்னாவிடம் தொலைபேசியில் உரையாடி முடித்த துர்க்காவின் முகத்தில் மந்தகாசம் நிறைந்திருந்தது. பெருமை பிடிபடாமல், “நரசம்மா, எங்கே போனே?” என்று குரல் கொடுத்தாள்.

  “நீங்க உணவு சாப்பிட்டதும், மாத்திரை உட்கொள்ள வேணாமா? அதை எடுக்கத்தான் போயிருந்தேன்,” என்று கூறி, மருந்தையும் சுடுநீரையும் துர்க்காவிடம் தந்தாள் நரசம்மாள்.

  மகளும் அவள்
வருங்காலக் கணவனும் குடியரசுக்கு வரும் விவரத்தைச் சொன்ன துர்க்கா, “உன் பொறுப்பிலே நான் விட்டிருந்த வரவேற்பு வேலைய இன்னும் சீக்கிரமா, கவனமா நீ செய்யணும். எனக்கு வேண்டியவங்களுக்கு நான் ‘போன்’ பண்ணி மாற்றத்தைச் சொல்லிடுறேன். ம்.. பிரசன்னாவின் தாத்தா இப்போ இருந்தார்னா, ‘சார்ட்டட் அக்கௌன்டன்சி’ பரீட்சை முடிந்து திரும்பிவர்ற தம் பெயர்த்தியைப் பார்த்து எவ்வளவு பூரிப்பு அடைவார் தெரியுமா?” என்று அங்கலாய்த்தாள்.

  “ஏனம்மா, பிரசன்னாவின் அப்பா இருந்தாமட்டும் குதூகலப்பட மாட்டாரா? சாரதி தம்பி இங்கே இருந்தா, அதுகூடத்தான் ஆனந்தப்படும்,” என்றாள் நரசம்மாள்.

  சூடான பார்வையுடன், “அவங்களப் பத்தி இப்போ ஏன் ஞாபகப்படுத்துறே? என் வாழ்க்கையில் நான் மறந்துபோனவங்கள நினைவுப்படுத்தாதே!” என்று சீறினாள் துர்க்கா.

  “மறந்துபோனவங்களா? ஏம்மா பொய் சொல்றீங்க? அவங்கள மறக்க நீங்க முயற்சி பண்றீங்கன்னு சொல்லுங்க! இன்னைக்குத்தானே சாரதிக்கு இருபத்து நான்காவது பிறந்தநாளு?”

  “நரசம்மா, பழைச கிளறி என்னைக் கொதிக்க வைக்காதே!”

  “நீங்க எவ்வளவுதான் சொல்லுங்கம்மா, என் மனசு கேட்கல. இன்னைக்குச் சாயந்தரம் ஸ்ரீ வடபத்ரக் காளியம்மன் கோயிலுக்குப் போயி, சாரதி பேருக்கு நான் ஓர் அர்ச்சனை பண்ணத்தான் போறேன்!” என்று சொன்ன நரசம்மாள், துர்க்காவின் முகம் கடுகடுப்பாய் மாறுவதைக் கண்டாள்; உடனே, “கவலைப்படாதீங்க முதலாளியம்மா, பிரச்சன்னா- சுரேஷ் வரவேற்ப ரொம்பப் பிரமாதமா நான் நடத்திக்காட்டுறேன்,” என்றாள் சாதுர்யமாக.

  ஒரு விநாடிக்குள் ‘குப்’பென்று துர்க்காவின் வதனம் மலர்ச்சி உற்றது. ஆனால், அவள் அறியாமலேயே அவள் உள்மனம் சாரதியை நினைத்துக் குறுகுறுத்தது.

  ***

  ‘அப்பர் கிளாஸ்’ மாதர்கள் சிலருக்கு ‘லேட்டஸ்ட்’ கலவையில் ‘ஸ்பான்ஞ்ச் கேக்’ செய்யும் முறையைக் கற்றுத்தந்த பின்னர், தன் இல்லம் ஏகினாள் துர்க்கா. இத்தாலிய ‘மோசேக்’ கற்கள் பதித்த, விலைமிக்க இரத்தினக் கம்பளம் விரித்த நடுக்கூடத்தில், அழுக்கும் சாதாரணனமான உடை தரித்த ஐந்தாறு சிறுவர்களோடு, தன்மகன் சாரதியும் சரிசமமாய் அமர்ந்து, பட்டங்கள் செய்துகொண்டிருந்ததைக் கண்ட துர்க்காவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது கோபம். அசுத்தமாய்ப்போன வரவேற்பறையை நரசம்மாளிடம் சொல்லி, கூட்டிக் கழுவித் துப்புரவு செய்துவிடலாம். ஆனால், தன் அந்தஸ்துக்குக் குறைவான ‘பசங்க’ளோடு சேர்ந்து, சாரதி எப்படிக் கும்மாளம் அடிக்கலாம்? இதற்காகவா துர்க்காவின் தந்தை ‘ஆடிட்டர்’ சீனிவாசன் மூன்ஸ்டோன் வீதியில் ஒரு பெரிய ‘லேண்டட்’ பங்களாவை வாங்கிப்போட்டார்?

  மகிஷாசுரமர்த்தினியாக ‘ஹாலி’ல் பிரவேசித்த துர்க்கா, அங்குக் குழுமியிருந்த அந்நிய வீட்டுப் பையன்களைச் சகட்டுமேனிக்குத் திட்டினாள்; குவிந்திருந்த பட்டங்கள், தாள்கள் முதலியவற்றைத் தாறுமாறாகக் கிழித்தெறிந்தாள். “அடுத்த முறை இப்படிச் செய்தா, இந்தமாதிரிக் குப்பைக் கூளங்கள கொளுத்திடுவேன்!” என்று உறுமினாள்; சாரதியின் முதுகில் ஆத்திரம் பொங்க நான்கு அறை கொடுத்தாள். வலி பொறுக்க முடியாத சாரதி, என்ன ரகளை என்று சமையலறையிலிருந்து அங்கு வந்து சேர்ந்த நரசம்மாளிடம் போய் ஒண்டினான்.

  “பார்த்தாயா நரசம்மா, இவன் அடிக்கிற கூத்தை! கால்வாயில் மீன் பிடிக்கப் போறதும், கண்ட கண்ட பொடிசுகள வீட்டுக்குள்ள கொண்டு வர்றதும். சேச்சே! படிப்பிலும் மோசமா இருக்கான்னு இவன் வகுப்பு வாத்தியார் வேறு அடிக்கடி புகார் பண்றாரு. பன்னிரண்டு வயசாகுது! தடிக்கழுதை மாதிரி வளர்ந்திட்டா போதுமா?” தன் ஆற்றாமையைக் கொட்டினாள் துர்க்கா.

  சிறிது நேரத்தில், ‘ஆடிட்டிங் கம்பெனி’யிலிருந்து மனை திரும்பிய தன் கணவர் மாதவனிடம் சாரதியைப்பற்றி ‘ரிப்போர்ட்’ கொடுத்தாள் துர்க்கா. “நம்ப குடும்பக் கௌரவம் என்ன? இவன் நடந்துக்கிற விதம் என்ன? எவ்வளவு கண்டிச்சாலும் திருந்தறானா? சரியான கல்லுளி மங்கன்!”

  மாதவன் மௌனியாக இருந்தார். பதினொரு வயதாகும் பிரசன்னாவைச் சிறிய பிராயத்திலேய�
� நடன வகுப்பில் சேர்த்து, அரங்கேற்றம் பண்ணி, சில கோயில் நிகழ்ச்சிகளில் ஆடவைத்து, பற்பல கோணங்களில் வண்ண நிழற்படங்கள் எடுத்து, இரண்டொரு முறை தொலைக்காட்சியிலும் தோன்றச்செய்து, அவளைப்பற்றித் தன் வளப்பமான சகாக்களுக்கு எல்லாம் டமாரம் அடித்துவிட்டாள் துர்க்கா. “இவள் அல்லவா என் மகள்!” என்று பிரசன்னாவை அவள் தூக்கிவைத்துப் பேசுவதும், பெரியவன் சாரதியைக் கரித்துக்கொட்டுவதும் மாதவனுக்குப் பிடிக்கவில்லை. சாரதியின் நடவடிக்கைகளைக் குறித்துச் சதா எள்ளுவதும், இகழ்வதும் துர்க்காவின் வாடிக்கையாகப் போய்விட்டது. வயதுப் பையன் பள்ளிநேரம் போக, வெளியே சென்று சுயேச்சையாக விளையாடுவது இயல்பே. அதற்காகத் துர்க்கா விரும்புவதுபோல் பெரிய வீட்டுப் பிள்ளைகளாய்ப் பார்த்துத்தான் அவன் விளையாட முடியுமா? ‘அத்தாப்பு’ ஓலைக்குடிசைகளும் தகர ‘ஜின்க்’ கூரைவீடுகளும் நிறைந்த பக்கத்துப் பொத்தோங் பாசீர் வட்டாரத்திற்குச் சாரதி அடிக்கடி போய்விடுகிறானாம். இவளைப்போல, இரண்டாம் உலகப் போருக்குப்பின் கடந்த முப்பது ஆண்டுகளாய்ப் பணத்திலே உயர்ந்துநின்ற இந்திய நபர்களுடன்தான் சாரதி பழகவேண்டுமாம். எப்படிச் சாத்தியப்படும்?

 

‹ Prev