Singathology

Home > Other > Singathology > Page 45
Singathology Page 45

by Gwee Li Sui


  “என்ன சொல்லுறே...? அந்த அளவுக்கு அண்டங்காக்கை கெட்டதா …?”

  “ஆமா…! அது கெட்ட பறவைதான்…! அது போகும் போது சும்மா போகலே…! வழியில் கிடைத்த ஒரு செத்த எலியையும் கவ்விக்கிட்டுப் போய் இருக்கு. அங்கே போய்ப் பார்த்தால் மீன்கொத்திக்குருவியைக் காணோம். ஏமாற்றம் அடைந்த அண்டங்காக்கை இது இருந்து மீன் பிடிக்கும் இடத்திலேயே குந்தி இருந்து கவ்விக்கிட்டுப் போன செத்த எலியைக் கொத்திக் கிழித்துத் தின்னு இருக்கு. கொத்திக் கிழித்துத் தின்னும் போது செத்த எலி அதன் பிடியில் இருந்து நழுவி இருக்கு. அந்த எலி கீழே தண்ணியில் விழுவதற்குள் அண்டங்காக்கை தாவி அதைப் பிடிச்சிருக்கு. ஆனா, அதைப் பிடிக்க முடியலே. எலியோடு சேர்ந்து தண்ணியில் தலைகுப்புற விழுந்திடுச்சு. அது நீந்தி கரை ஏறுவதற்குள் பசியோடு இருந்த ‘பிரன்ஹா’ மீன்கள் அதைப் பதம் பார்த்திடுச்சுங்க…! கூரிய பற்களை உடைய அந்த மீன்களுக்கு அண்டங்காக்கை இரையாக ஆயிடுச்சு…!”

  “அட பாவமே…!”

  “அதுக்குப் பாவம் பார்க்கக் கூடாது…!”என்றது ஒரு கிளி.

  “அப்புறம்...?” என்று கிழக்கிளி கேட்டது.

  “இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சில குருவிங்கதான் இந்த மீன்கொத்திக்குருவியைச் செத்துவிட்டதுனு நினைச்சிடுசுங்கு. புரளியையும் கிளப்பி விட்டுடுச்சுங்க…!”

  எல்லாக் கிளிகளும் மீன்கொத்தியைப் பார்த்தன.

  “என்னை ஏன் இப்படிப் பார்க்குறீங்க…? செத்த மீன்கொத்திக்குருவி உயிரோடு வந்திடுச்சேனு பயந்திடாதீங்க…! பயப்படாதீங்க! நான் சாகலே…! உயிரோடுதான் இருக்கிறேன்…!” என்று மீனகொத்திக்குருவி சிரித்தது.

  அப்போது, ‘கீச் கீச்’ எனும் இனிய ஒலி வானத்தில் இருந்து ஒலித்தது. எல்லாக் குருவிகளும் அண்ணாந்து பார்த்தன. சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு கூட்டம் கூட்டமாக பறந்து வந்தன.

  அதைப் பார்த்ததும், “அடேயப்பா நீண்ட நாளைக்குப் பிறகு இப்பத்தான் இந்தச் சிட்டுக் குருவிங்களையே பார்க்கமுடிகிறது!” என்றது ஒரு இளங்கிளி.

  “ஆமா…! சில நல்ல மனங்கள் இந்த இனத்தைக் அழிவில் இருந்து காப்பாற்றிடுச்சுங்க…!” என்றது இளங்கிளி.

  “இந்த குருவிங்க எங்கே போகுதுங்க...?” என்று கிழக்கிளி கேட்டது.

  “என்ன இப்படிக் கேட்கிறே...? நம் ஊரின் பிறந்த நாளைக் கொண்டாடக் கிளம்பிப் போகுதுங்க…! நீயும் கிளம்பு. நாமும் பிறந்த நாளைக் கொண்டாடப் போவோம்…!” என்றது.

  “நான் வரலே…! நீயும், மற்ற குருவிங்களும் போயிட்டு வாங்க…!”

  “நீ ஏன் வரமாட்டேன்கிறே…?”

  “நான் வர விரும்பலே…!”

  “அதான் ஏன்னு கேட்கிறேன்…! முன்னோடிக் குருவிங்களான நாம்தானே முதல் குருவிகளாக அங்கே போய் முன்னே நிற்கணும்…! ம்... கிளம்பு…!”

  கிழக்கிளி மறுபடியும், “எனக்கு மனம் சரி இல்லே…! நீங்க போயிட்டு வாங்க…!” என்றது.

  “எனக்குந்தான் மனம் சரி இல்லே…! அண்டங்காக்கை உன்னிடம் சொல்லியதைத்தான் என்னிடமும் வந்து சொல்லுச்சு! அதுக்காக நான் அதை இன்னுமா நினைத்துக்கொண்டு இருக்கிறேன்...? இல்லேயே…! அதை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டுக் கிளம்பப் போகிறேனே…! நீயும் கிளம்பு…! இளங்கிளிகளுடன் சேர்ந்தே போவோம்…!” என்றது மீன்கொத்திக்குருவி.

  மற்ற இளங்கிளிகளும், “நீ போகலேனா நாங்களும் போகமாட்டோம்…! நீ கொண்டாடாத பிறந்த நாளை நாங்களும் கொண்டாட மாட்டோம்…!” என்று கத்தின.

  கிழக்கிளியால் மறுக்க முடியவில்லை. கூட்டாளிக் குருவிகள் சொல்வதையும் தட்டிக்கழிக்க முடியவில்லை.

  அரை மனத்தோடு, “சரி போவோம்…!” என்றது.

  எல்லாக் குருவிகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. பாடிக்கொண்டே மேலெழுந்து பறந்தன. வானத்தில் இருந்து பார்க்கும் போது ஊரின் வளர்ச்சி கண் முன்னே ‘பளிச்’என்று தெரிந்தது. அதே நேரத்தில் ஊரின் பழைய காட்சிகளும் கிழக்குருவிகளின் மனக் கண் முன் தோன்றி மறைந்தன.

  “அடேயப்பா எவ்வளவு பெரிய மாற்றம்…?” என்றது மீன்கொத்திக்குருவி.

  “என் கண்களை நானே நம்பலே…! எனக்கே மலைப்பாக இருக்கு…! பழைய இடமே தெரியலேயே
…!” என்றது தூக்கணாங்குருவி,

  கிழக்கிளியும், கூட்டாளிக் குருவிங்களும் பழைய தோற்றங்களையும், புதியவற்றின் பொலிவையும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டே சென்றன.

  “கண்மணிகளே…! எங்க காலத்து உழைப்பு இப்ப உங்க கண் முன் தெரியுது...! இதைப் போல உங்க காலத்தின் உழைப்பை நீங்க உங்க குருவிக் குஞ்சுகளின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தணும்…!”.

  எல்லாக் கிளிகளும் சொல்லி வைத்தாற்போல், “எங்க காலத்து உழைப்பையும் நாங்க எங்க கண்மணிகளின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவோம்…! ஆமா…! ஆமா…! கண் முன்னே காட்டுவோம்…!” என்று கத்தின.

  எல்லாக் குருவிகளும் பாடாங்கை அடைந்தன. அவற்றுக்கு முன்பே பலவண்ணப் பறவைகளின் கூட்டம் அங்கு குழுமி இருந்தது. சின்னச்சின்ன குஞ்சுகளின் சின்னச்சின்னக் கன்னங்களில் சின்னச்சின்ன சிவப்பு வெள்ளை பூக்கள் பூத்திருந்தன. அவற்றின் குறுஞ்சிரிப்பு மனத்தைக் கொள்ளை கொண்டது. பறவை இனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தியது. ஊருக்கு உழைக்கும் இளைய தலைமுறைப் பறவைகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. கூடி இருந்த கூட்டம் இறக்கையொலி எழுப்பியும், இன்னிசை பாடியும் வரவேற்றன. புத்தாக்கச் சிற்பியான பெரியகொக்கு வெள்ளை நிறத்தில் தோன்றியது. கூடி இருந்த பறவை இனம் பரவசம் அடைந்தது. இறக்’கையொலி விண்ணைத் தொட்டது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் கிழக்கிளியின் நாளங்களில் புதுக்குருதி பாய்ந்தது. நாடி நரம்புகள் முறுக்கேறின. தோள்கள் தினவு எடுத்தன. இறக்கைகளை அடித்துக்கொண்டு எழுந்து நின்று இன்பக்கூத்தாடியது. அதைப் பார்த்து இளங்கிளிகள் சிலிர்த்து எழுந்தன. கூட்டாளிக் குருவிகளும் அதோடு சேர்ந்து கொண்டன. தேன் சிட்டு வந்தது. தேனாறு ஓடியது. வானம் இடித்தது. விண்மீன்கள் ஒளிர்ந்து உதிர்ந்தன.

  மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தித் திளைக்கும் கிழக்கிளியைப் பார்த்து, “இப்பவாகிலும் சொல்லு…! அண்டங்காக்கை உன்னிடம் என்ன சொல்லுச்சு…!” என்று தூக்கணாங்குருவி கேட்டது.

  இளங்கிளிகளும், “சொல்லு சொல்லு…!” என்று வேண்டின.

  கிழக்கிளி ஆடியபடியே சிரித்துக்கொண்டு, “பெரியகொக்குதான் பிறந்த நாளைக் கொண்டாட வந்திடுச்சே…!” என்றது.

  The Big Crane

  BY MA ELANGKANNAN

  Translated by A. Palaniappan

  The horizon glowed in crimson red as the sun rose. The young parrots came out of their nest holes one by one. They chirped and flew over and settled on the branches of the mango tree. One parrot among them scanned its flock with its rosary pea eyes. The parrot who had eaten the fruits and ripened with age was not there at all.

  With obvious alarm, it asked, “How is it that our old parrot is missing?”

  All the parrots stopped chirping and scanned through their flock. The most senior and intellectual old parrot among the flock was missing.

  The nervous young parrots said, “It looks like our old parrot has not even come out of its nest hole!”

  “How can it not come out of its burrow? Of all the days, it wouldn’t refuse to come out today! It is well aware that today is our nation’s birthday! All the more as it is a golden jubilee! One can hardly contain it! It should be the first to lead us! Usually, it would get up early and rouse the rest of us. It is unlikely that it is still sleeping today. There must be some reason!”

  All the parrots placed the tip of their wings on their foreheads and drowned themselves in deep thoughts.

  “What could possibly be the reason?”

  “Cannot fathom the reason!”

  “Our old parrot has been looking disturbed since yesterday! It did not eat any fruits! It is worrying indeed!”

  “Yes! I observed that too. It didn’t even wet its mouth with a drop of water! It was downright starving! I think the reason must be the crow. It is the one who will mooch around nooks and corners and put its mouth in anything it fancies. It must have taken a mouthful and spat it all out for the old parrot!”

  “It must be whatever it spat that has given the old parrot indigestion. Come, let’s go and see the old parrot cooped up in its next hole.”

  All the young parrots flew away from the branches and clung onto the tree where the old parrot’s burrow was. One young parrot turned to look behind once he reached the entrance of the next hole.

  “Why are you looking behind? Go inside and see!”

  “Yes! Go and see!” encouraged the young parrots who were looking at it. It also gained confidence and went inside.

  It saw the old parrot squatting in a corner looking very pathetic. When the young parrot saw the old parrot, it felt very sympathetic. “Usually, you would wake up early before dawn and come outside! Why didn’t you do so today? All right, come, let’s go,” said the young parrot as it used its red beak to hold and carry one of the old parrot’s wings.

  The old parrot felt the affection and care of the young parrot and got up as it gazed at the young parrot keenly.

  “Why are you looking at me like this? Have you not seen me before?” asked the young parrot with a smile.

  But the old parrot’s beak did not move.

  “All right! Come, let’s go!” said the young parrot.

  The old parrot did not open its mouth to that too. It came out of its nest hole and stood at the entrance. It saw the outside world through the rays of the young sun. But the light did not illuminate its mind.

  Even the enthusiastic screech of the young parrots hailing “The old parrot has come! The old parrot has come!” did not fall on its ears.

  One parrot said, “Why are you standing at the entrance of the nest hole? Come here! Come and join us!”

  “Why didn’t you come out earlier? We were frightened and flustered,” said another parrot.

  “Yes! We were all afraid. Even a mischievous parrot among our flock said ‘Looks like it has slept permanently in it
s nest hole’ without any qualm. We shuddered!” another parrot said.

  After hearing what was said, the old parrot’s face shrank. It was incensed. Although it was aware that, “just like the padi grains are tainted by empty grains, there are bound to be worthless ones among even in our parrot flock”, it said, “I am thinking of ending my life with an eternal sleep.”

  When it uttered these words, all the parrots were stunned.

  The young parrot who had blurted those words was remorseful.

  “Please forgive me. I should not have said that.”

  “Why are you asking for forgiveness? What is wrong in whatever you said? I am advanced in age. Whether I live or I die does not matter anymore,” it said.

  All the parrots were shocked again.

  One parrot among them said, “How advanced in age have you become? There are other parrots who are much older than you. Why are you blabbering like this? You will live to a ripe old age of hundred. You will be hail and hearty! You shall be!”

  Another young parrot said, “You are blabbering like this with something in your mind! What on earth did the big black crow tell you? Please tell us! We shall give it a good thrashing!”

  “It did not say anything.”

  “If it didn’t say anything, why haven’t you sipped a drop of water? After it had left, you didn’t even touch the fruits! Why?”

  Another parrot said immediately, “Don’t you know that you should not have an empty stomach? Come, come and eat the fruits!”

  The rest of the parrots chanted unanimously, “Come, let’s go! Let’s go!”

  The old parrot could not give any more excuses. “All right then! Let’s go!” It said and flew high up flapping its wings. All the parrots rose up and flew slowly to keep up with its pace.

 

‹ Prev