Singathology

Home > Other > Singathology > Page 44
Singathology Page 44

by Gwee Li Sui


  கிழக்கிளி பேசாமல் இருந்தது. ஆனால், அது மனம் பழைய நினைவிலேயே இருந்தது.

  “என்ன பேசாமல் இருக்கிறே…?” என்று கூண்டுக்கிளி கேட்டது.

  “விடுதலை ஆனதும் நீ ஆடிப் பாடி மகிழ்ச்சியில் திளைக்கிறே…! ஆனா, நாங்க விடுதலை ஆன போது உன்னைப் போல் ஆடலே, பாடலே…! மகிழ்ச்சியில் திளைக்கலே…!”

  கூண்டுக்கிளி வியப்புற்று, “ஏன்…?” என்று கேட்டது.

  “எங்க ஊரின் தலைமைக் குருவியான பெரியகொக்கு ஆடினால்தானே வால்களாகிய நாங்க ஆட முடியும். அது ஆடலே, நாங்களும் ஆடிப் பாடலே…!”

  கூண்டுக்கிளியின் கண்கள் அகல விரிந்தன.

  “ஏன் ஆடலே… எதுக்குப் பாடலே...?”

  “‘எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது’னு தெரிந்ததும் நாங்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கலே! விடுதலை ஆனதும் பெரியகொக்கு பேருரை நிகழ்த்த வந்துச்சு. அது முகத்தைப் பார்த்ததுமே எங்க ஆட்டபாட்டம் எல்லாம் பறந்திடுச்சு…! ‘அது சிரித்த முகத்தோடு வரும். எங்கும் செண்பகப் பூ உதிரும்’னு நினைத்துக்கிட்டு இருந்த எங்களுக்கு ஏமாற்றமாக இருந்துச்சு…! அது சிரித்த முகத்தோடு வரலே. அது வாடிய முகத்தோடு வந்துச்சு. பேச மேடையில் நின்னுச்சு. எங்களை ஏறிட்டுப் பார்த்துக் கண் கலங்கிடுச்சு. அது கண்ணீர் விட்ட காட்சியைப் பாடாங்கில் இருந்த நாங்க பார்த்ததும் பதறிவிட்டோம். கூடுகளில் இருந்த ஊர்ப் பறவைங்களும் அங்கு இருந்தே கருப்பு-வெள்ளைக் காட்சியில் பார்த்து அனலில் விழுந்திடுச்சுங்க…!” என்று கிழக்கிளி சொல்லும் போது அலகுகள் ‘படபட’வென அடித்துகொண்டன. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  அது அழுவதைப் பார்த்துவிட்டு எல்லாக் கிளிகளின் கண்களும் கலங்கின.

  “ஏன் கண்ணைக் கசக்குறீங்க…? அழாதீங்க கண்ணீரைத் துடைத்துக்கங்க…!” என்றது கூண்டுக்கிளி.

  எல்லாக் கிளிகளும் இறக்கை நுனிகளால் கண்ணீரைத் துடைத்துகொண்டன.

  சிறிது நேரம் அமைதி நிலவியது. “பெரியகொக்கு ஏன் அழுதுச்சு…?” என்று கூண்டுக்கிளி மெதுவாகக் கேட்டது.

  கிழக்கிளி தழுதழுத்த குரலில் கண்ணீர் ததும்ப, “தனித்து விடப்பட்ட குஞ்சுகுத்தானே தனிமையைப் பற்றித் தெரியும்! சரியாக இறக்கை முளைக்கும் முன் காடுகளையும், மலைகளையும் கடக்க வேண்டுமே…! மழையில் நனைந்து, சூறைக்காற்றில் சுழல வேண்டுமே...! சுட்டெரிக்கும் வெய்யிலில் பொசுங்கி மீள வேண்டுமே…! விளையாட்டு இல்லேயேனு நினைத்திருக்கும் போலிருக்கு. அதான் அழுகை வந்திடுச்சு…!” என்று சிறிது இடைவெளி விட்டு கண்ணீரைத்துக் கொண்டு நிமிர்ந்து மிடுக்காக நின்றது. “அதுக்காகப் பெரியகொக்கு அயர்ந்துவிடவில்லை…! உயர உயரப் பறக்க வேணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றைக் காலில் நின்னுச்சு…! சிந்தனையில் ஆழ்ந்துச்சு…! புதிய வழியைக் கண்டு பிடித்து புத்தாக்கத்தை உருவாக்குச்சு…! ‘கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து’னு (காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருந்து, காலம் வாய்ப்பாக கிடைத்ததும் குறி தவறாமல் குத்தி செயலில் காட்டிடுச்சு…!” குறள் 490) ஊர்ப் பறவைங்களும் ஒன்று சேர்ந்து உழைச்சுதுங்க. ஊர் வளர்ந்து இன்று உச்சாணிக் கொம்பைத் தொட்டுடுச்சு…! நாங்க உயர்ந்த வாழ்க்கை வாழ்கிறோம்…! பெரியகொக்கைப் போற்றுகிறோம் …!” என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு உணர்ச்சி பொங்கச் சொல்லியது.

  கூண்டுக்கிளியின் உடல் புல்லரித்தது. இறகுகள் சிலிர்த்து நின்றன.

  “நீங்க கொடுத்து வைத்த குருவிங்க…! அதான் உங்களுக்கு இப்படி ஒரு தூய வெண்ணிறப் பெரியகொக்கு கிடைத்திருக்கு...!” என்றது கூண்டுக்கிளி.

  அது பாராட்டியதைச் செவிமடுக்கும் போது கிழக்கிளி மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், அடுத்த நொடியே அண்டக்காக்கை சொல்லியதை நினைத்துக்கொண்டதும் முகம் சுருங்கி விட்டது.

  “நாங்க கொடுத்து வைத்த குருவிங்கதான். ஆனா …?” என்று இழுத்தது.

  “ஏன் ஆனானு இழுக்கிறே...?” என்று கூண்டுக் கிளி கேட்டபோது கிழக்கிளியின் தலைமுறையைச் ச
ேர்ந்த தூக்கணாங்குருவி விரைந்து பறந்து வந்தது. பதற்றத்தோடு இறக்கைகளை ஒடுக்கிக்கொண்டு கிழக்கிளி இருந்த கிளைக்கு நேர் எதிரே உள்ள சிறு கிளையில் அமர்ந்தது.

  கவலை தோய்ந்த முகத்தோடு வந்த அது கிழக்கிளியின் சோர்ந்த முகத்தைப் பார்த்ததும், ‘இதுவும் வருத்தத்தோடுதான் இருக்கு போலிருக்கு’ என்று நினைத்தக்கொண்டு, “உனக்கும் தெரிந்துவிட்டதா…?” என்றும் கேட்டது.

  கூடி இருந்த கிளிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

  கூடி இருநத கிளிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாக் கிளிகளும் வியப்போடு அதைப் பார்த்தன. கிழக்கிளியும் பார்த்தது..

  “எனக்கு ஒண்ணும் புரியலேயே…! எதைத் தெரிந்து விட்டதானு கேட்கிறே...?” என்று கேட்டது.

  “நம்ம மீன்கொத்திக்குருவி கண்ணை மூடிடுச்சே…! அதைத்தான் உனக்கும் தெரிந்துவிட்டதானு கேட்டேன் …!”

  கிழக்கிளிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மற்ற கிளிகளும் அதிர்ச்சி அடைந்தன.

  “மீன்கொத்திக்குருவி செத்து விட்டதா...? அது நல்லாத்தானே இருந்துச்சு…!”

  “நல்லாத்தான் இருந்துச்சு…! ஆனா, ஏன் செத்துச்சுனு தெரியலே…!”

  ‘அண்டக்காக்கை நம்மிடம் சொல்லியதை மீன்கொத்திக் குருவியிடமும் போய்ச் சொல்லி இருக்கும் போலிருக்கு…! அதை நினைத்துத்தான் மீன்கொத்திக்குருவி இரை ஏதுவும் எடுக்காமல் கண்ணை மூடிடுச்சு போலிருக்கு…! அதுக்கும் பெரியகொக்குனா உயிராச்சே…!’ என்று பலவாறு எண்ணிய கிழக்கிளி, “ஏன் செத்துச்சுனு உனக்குத் தெரியுமா…?” என்று கேட்டது.

  “தெரியாதே…!” என்று தூக்கணாங்குருவி சொல்லிய போது அது கண்களை அதுவே நம்பவில்லை. அது செத்துவிட்டதாகச் சொல்லிய மீன்கொத்திக்குருவியும், அந்த மீன்கொத்திக்குருவியைத் தேடிக்கொண்டு போன இரண்டு இளங்கிளிகளும் பறந்து வந்து அமர்ந்தன.

  மீன்கொத்திக்குருவியைப் பார்த்ததும் கிழக்கிளி வாயைப் பிளந்தது. அதே நேரத்தில் தூக்கணாங்குருவியையும் கனல் கக்கும் கண்களால் பார்த்தது.

  “உயிரோடு இருக்கிற மீன்கொத்திக்குருவியைச் செத்துவிட்டதுனு வாய் கூசாமல் சொல்லிவிட்டாயே…! உனக்கு அறிவு இருக்கா...? இப்ப இதோ உன் கண் முன்னே வந்து நிற்குதே இதுக்கு என்ன சொல்லுறே...? ” என்று கேட்டது.

  கூனிக்குறுகி நின்ற தூக்கணாங்குருவி, “வரும் வழியில் குருவிகள் சொல்லியதை நம்பி விட்டேன்…!” என்றது.

  “வழியில் பறந்து போகிற பறந்து வருகிற குருவிங்க சொல்லுறதை நம்பலாமா…? உண்மை தெரியாமல் இப்படி உளறலாமா...? ஒரு நொடியில் என் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டாயே …!” என்று வருந்தியது.

  “சில குருவிங்க கிளப்பி விட்ட புரளியை இது நம்பிடுச்சு…! அவ்வளவுதான்…!” என்றது மீன்கொத்திக்குருவி.

  அதோடு சேர்ந்து பறந்து வந்த இளங்கிளியும், “ஆமா!” என்றது.

  கிழக்கிளியின் பார்வை இளங்கிளி பக்கம் திரும்பியது.

  “அது சரி! நீ இங்கேதானே இருந்தே…! அது எப்படி இந்த குருவியுடன் சேர்ந்து வந்தே...?” என்று கேட்டது. …!

  இளங்கிளி புன்னகை சிந்த தலைகுனிந்தபடி, “உனக்கு உதவத்தான்…!” என்றது.

  “எனக்கு உதவவா…?”

  “ஆமா! அண்டங்காக்கை உன்னிடம் ‘என்ன சொன்னது’னு எங்களுக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொண்டு உனக்கு உதவலாம்னுதான் நானும், இந்த இளங்கிளியும், இந்த மீன்கொத்திக்குருவியையும், தூக்கணாங்குருவியையும் சந்தித்துப் பேசப் போனோம்...!”

  “ஆனா, இந்த தூக்கணாங்குருவியைப் பார்க்க முடியலே…! இந்த மீன்கொத்திக்குருவியைத்தான் பார்த்தோம். அந்த அண்டங்காக்கை உன்னை வந்து பார்த்துப் போன பிறகு மீன்கொத்திக்குருவியையும் போய் பார்த்திருக்கு…!” என்றது இன்னொரு இளங்கிளி.

  உடனே கிழக்கிளி, “நான் நினைத்தேன்…! ‘என்னைப் பார்த்துட்டுப் போன அண்டங்காக்கை என் கூட்டாளிக் குருவிங்களையும் போய்ப் பார்க்கும்’னு…!” என்றது.

  “அது போய் இந்த மீனகொத்தியின் காதையும் கடித்து இருக்கு. அப்புறம் என்ன...? இந்த மீன்கொத்திக்குருவிக்கும் உன் நிலைதான்! நீ எப்படி கவலைப் பட்டுக்கிட்டு காய் கனி தின�
�னாமல் இருந்தாயோ அதைப் போலவே இதுவும் இருந்து இருக்கு. தலை சுற்றி விழுந்தும் இருக்கு …!”

  “அப்படியா…?” என்று கிழக்கிளி கேட்டது.

  “ஆமா! இந்த மீன்கொத்திக்குருவி விழுந்ததும் இளம் மீன்கொத்திக்குருவிங்க வந்து காப்பாற்றி கூட்டிலேயும் கொண்டு போய் விட்டுடுச்சுங்க…! அதுக்குப் பிறகு இந்த மீன்கொத்திக்குருவி கூட்டிலேயே இருந்துடுச்சு…! மீன் பிடிக்கப் போகலே…!”

  “அப்படினா இதைச் செத்துவிட்டதாக இந்தத் தூக்கணாங்குருவி ஏன் சொல்லுச்சு…?”

  “அதை ஏன் கேட்கிறே...? முதல் நாள் இந்த மீன்கொத்திக்குருவியைச் சந்தித்த அண்டங்காக்கை மறு நாளும் இதைப் பார்க்கப் போயிருக்கு! ஏன் பார்க்கப் போயிருக்குத் தெரியுமா ‘மீன்கொத்திக்குருவிக்கு வயிற்றுப்போக்கு மருந்து கொடுத்து விட்டு வந்தோமே அது எந்த அளவுக்குக் கழிச்சலை ஏற்படுத்தி இருக்கு’னு தெரிந்து கொள்ளத்தான் …!”

 

‹ Prev