Singathology

Home > Other > Singathology > Page 61
Singathology Page 61

by Gwee Li Sui


  சிங்கா: சாமுண்டி என்ன முடிவுக்கு வந்தார்?

  பத்மா: நண்பர் சிகண்டியைப் பார்த்து பேசினார்.. நண்பரே! எனக்கு முடிவு நெருங்கிக் கிட்டிருக்கு.. என் மகன் உலகம் அறியாத பாலகன்.. அவன் பாதுகாப்புக்கு பத்தாயிரம் வராகன் கையிருப்பை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். பையன் வளர்ந்து வாலிபன் ஆன பிறகு. இந்தத் தொகையில் நீங்க விரும்புகிற அளவுக்குக் கணிசமா கொடுத்து உதவணும்..இது தான் என்க டைசி ஆசை.. இந்தாங்க பத்தாயிரம் வராகன்’னு சிகண்டிக் கிட்டே ஒப்படைச்சார்…

  சிந்தா: சொல்லுங்க.. சொல்லுங்க.. என்ன ஆச்சு அப்புறம்?

  பத்மா: அவர் விரும்பும் தொகையை தன் மகன் சுந்தரத்துக்குக் கொடுக்க வேண்டும்னு ஒப்பந்தம் செய்துகிட்டார்..அதாவது சிகண்டி விரும்பும் தொகையை குடுக்கணும். சாமுண்டியின் காலம்மு டிஞ்சது. சிறுவன் சுந்தரம் தாய் மாமன் வீட்டில் வளர்ந்து இளைஞன் ஆனான்.

  சிங்கா: பிறகு நடந்ததைச் சொல்லுங்க. பத்மாவதியம்மா…

  பத்மா: சுந்தரம் சொந்தமா தொழில் செய்து முன்னேறணும்’னு தாய்மாமன் விரும்பினார். அதனாலே சிகண்டியின் வீட்டுக்கு அவனை அனுப்பி தகப்பனார் ஒப்படைச்ச தொகையை வாங்கிட்டு வரச் சொன்னார். சுந்தரம் அவரைத் தேடிப் போன சமயம்…

  சிந்தா: ம்..சொல்லுங்க டீச்சர்.. சொல்லுங்க.

  பத்மா: சொந்தத் தொழில் செய்ய தொகையைக் கேட்டான் சுந்தரம்.. ஒப்பந்தப்படி பணத்தை ஒப்படைப்பதாக சொல்லிட்டு அறைக்குப் போன சிகண்டி கொஞ்ச நேரத்திலே திரும்பி வந்தார். வராகனைக் குடுத்தார். சுந்தரம் அந்தத் தங்க நாணயத்தை எண்ணிப் பார்த்தான். அவனுக்கு அதிர்ச்சி.. ஆயிரம் வராகன் மட்டுமே இருந்தது..

  சிங்கா: ம்.. மேலே சொல்லுங்க..

  பத்மா: என் அப்பா உங்ககிட்டே தந்தது பத்தாயிரம் வராகன்.. நீங்க ஆயிரம் வராகனை மட்டும் கொடுக்கிறீங்களேன்னு சுந்தரம் சொன்னான். ஒப்பந்தப்படி உனக்குத் தர வேண்டியதைத் தான்த ந்திருக்கேன்னு அவர் பதில் சொன்னார்.. .என் அப்பா உங்ககிட்டே ஒப்படைச்சது பத்தாயிரம் வராகன்னு சுந்தரம் எடுத்துச் சொன்னப்ப..

  சிந்தா: சிகண்டி என்னங்க சொன்னார்?

  பத்மா: சுந்தரம்.. நீ சொல்றது உண்மைதான். ஆனால் ஒப்பந்தத்தை நீ புரிஞ்சுக்கணும்… உன் அப்பா கொடுத்ததிலே எனக்கு விருப்பமான தொகையை உனக்குக் குடுக்கலாம்ங்கிறது தான் ஒப்பந்தம்..ஆயிரம் வராகன் உனக்குத் தரலாம் என்பது என் விருப்பம்…அதைத் தான் செய்திருக்கேன். உனக்கு விருப்பம் இல்லேன்னா அந்த ஆயிரத்தைத் திருப்பிக் கொடுத்திட்டு நீ போகலாம்னு சிகண்டி சொன்னார். அவனுக்கு அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சி.. அவர்சொ ன்னதைத் தான் செய்தான் சுந்தரம்..

  சிங்கா: பிறகு ..?

  பத்மா: சுந்தரம் மாமாவோடு நீதிபதிகிட்டே போனான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி விசாரிச்சப்ப, தான் ஒப்பந்தத்தை மீறவேயில்லேன்னு சிகண்டி சொன்னார். நான் விரும்புறதை சுந்தரத்துக்குத் தரணும்…. அது தான் ஒப்பந்த வாசகம். என் விருப்பப்படி அவனுக்கு ஆயிரம் வராகனைக் குடுத்தேன்னு சொன்னார். அந்தப் பத்திரத்தை வாங்கி கவனமா படிச்சுப் பார்த்தார் நீதிபதி.

  சிந்தா: படிச்சிட்டு என்னங்க சொன்னார்?

  பத்மா: சிகண்டி! நீ ஒப்பந்த வாசகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அதற்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கிறாய் என்றார் நீதிபதி. சாமுண்டி ஒப்படைத்ததில் எத்தனை வராகனை பையனுக்கு நீ கொடுத்தாய் என்று நீதிபதி கேட்டார். ஆயிரம் வராகன்’னு சிகண்டி பதில் சொன்னார்.. சரி, சாமுண்டி கொடுத்ததில் நீ விரும்பி எடுத்துக்கொண்டது எவ்வளவு’ன்னு அடுத்த கேள்வியைத் தொடுத்தார் நீதிபதி. ஒன்பதாயிரம் வராகன்னு சொன்னதும்..

  சிங்கா: நீதிபதி என்ன செய்தார்னு சொல்லுங்க பத்மாவதி…

  பத்மா: அப்ப உனக்கு விருப்பமான தொகை ஒன்பதாயிரம் பவுன்…உங்க ஒப்பந்தப்படி உனக்கு விருப்பமான அந்த அளவுப் பணத்தைத் தானே சுந்தரத்துக்கு நீ கொடுத்திருக்கணும்.. அது தான் ஒப்பந்த விதி. அதனாலே அந்த ஒன்பது ஆயிரத்தையும் நீயாகவே கொடுத்த ஆயிரத்தையும் சேர்த்து பத்தாயிரம் வராகனை சுந்தரத்துக்கு �
�ீ தரணும். அந்த ஆயிரமும் அவனுக்குத் தான் சொந்தம்..அது மட்டும் இல்லே.. சுந்தரத்தை ஏமாத்த நினைச்ச வியாபாரியான நீ அதுக்கு தண்டனையா மேலும் பத்தாயிரம் வராகனைக் கொடுக்க வேண்டும்’னு நீதிபதி தீர்ப்பளிச்சார்…

  நினைவு முடிவு..

  சிங்கா: கதையா இருந்தாலும் அது நல்ல தீர்ப்பு. நம்ம குடும்பத்திலே அது மாதிரி விவகாரம் இல்லே..அருணுக்கும் விமலாவுக்கும் நடக்க வேண்டிய மங்கல காரியம் சீக்கிரமே நடக்கணுங்கிறது தான் நம்ம விருப்பம்.. துடிப்பு…

  சிந்தா: ஆமாங்க..அது தான் சாரதாவுக்கு நாங்க செய்ய வேண்டிய கடமை. கைம்மாறு..

  பத்மா: நடக்க வேண்டியது நல்லபடியா நடக்கும்.. விருப்பம் போல..

  சிங்கா: அதிலே உங்களுக்கு முக்கிய பங்கு இருக்குங்க பத்மாவதியம்மா…

  சிந்தா: நீதிபதியாட்டம் நீங்க பொறுப்பேத்துக்கிட்டு கடமையை நிறைவேத்தணும்..

  சிங்கா: கதைபேச வந்த என்னைக் கட்டிப்போட முடிவு செய்திட்டீங்களா? கலியாணம் காட்சி இந்த வீட்டிலே நடந்தாகணும்… இல்லியா? சரி…. செய்ய வேண்டியதைச் செய்துடுவோம்.

  காட்சி 4

  விமலா, பத்மாவதி

  பத்மா: பாப்பா… பாப்பா.. பாப்பா..! [அழைப்பு.] ம்.. நான் கூப்பாடு போடுறேன்.. பதில் இல்லே.. ஒருவேளை அது வேற பெண்ணா இருக்குமோ.. [மீண்டும்.] … பாப்பா.. பாப்பா..!

  விமலா: பாப்பாவா? பழைய குரல் மாதிரி இருக்கு.. ஒரு வேளை பத்மா டீச்சரா இருக்குமோ..ம். பாக்கலாம்..

  பத்மா: பழைய பாப்பா தான்…ஆனா இப்ப பருவப் பொண்ணு..வளர்ந்து வயசுக்கு வந்து அழகான பெண்ணாயிட்டது .. விமலா.. விமலா… [அழைப்பு.]

  விமலா: நீங்களா டீச்சர்… வாங்க.. வாங்க. பாப்பான்னு யாரோ யாரையோ கூப்பிடுறாங்கன்னு நினைச்சி கொஞ்ச நேரம்.. நான்.. நான்..

  பத்மா: அசந்துட்டியா? இருக்கும்.. இருக்கும்.. பார்த்து பல வருஷம் ஆயிட்டது, இல்லியா..? ஆனால் நான்தான் இப்ப அசந்து ஆச்சரியத்திலே நிக்கிறேன், விமலா.. உன் அழகைப் பார்த்து…

  விமலா: போங்க டீச்சர்.. எனக்கு.. எனக்கு… ரொம்ப… [நாணத்துடன்]

  பத்மா: வெட்கமா இருக்கா? பாப்பான்னு கூப்பிட நான் பச்சைக் குழந்தையான்னு கேக்கிறியா, விமலா? நான் அப்ப சொல்லிக் கொடுத்த பாடம்… பாட்டு..

  விமலா: எல்லாம் மனப்பாடம்.. எப்புடி மறக்க முடியும்?

  காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு

  கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

  மாலை முழுதும் விளையாட்டு- என்று

  வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா..

  பத்மா: இப்பவும் அப்புடித்தானா விமலா..? படிப்பு முடிஞ்சிருக்கும்..கலியாண அழைப்பு எப்ப வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன்.. இதுவரைக்கும் வரலே. முறை மாப்பிள்ளை அருண் வீட்டோட இருக்கிறப்ப ஒரு கவலையும் இல்லே உன்னைப் பெத்தவங்களுக்குன்னு பல கணக்கு மனசுக்குள்ளே…

  விமலா: டீச்சர்… அது..வந்து.. எனக்கு…

  பத்மா: என்ன ஆச்சு..? கலியாணத்தை ஒத்தி வச்சீட்டீங்களா? அருண் இப்ப எங்கே இருக்கான்?

  விமலா: நல்ல நேரத்திலே நீங்க வந்திருக்கிறீங்க… உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டே இருக்காங்க.. அதனாலே…

  பத்மா: அவங்களை நான் பாக்கணும், பேசணும்னு சொல்றியா விமலா?

  விமலா: ஆமாங்க டீச்சர்.. நீங்க நம்ம வீட்டிலேயே தங்குங்க.. அப்பாவும் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க…

  பத்மா: என் பாப்பாவின் கட்டளை..மறுக்கவா முடியும்? ஊர் சுத்தி சுத்தி எனக்கு அலுத்துப் போச்சு, விமலா.. பழைய இடத்திலே காலாற நடக்கணும், அக்கம் பக்கத்திலே அந்த நாள்லே இருந்தவங்களை பார்த்துப் பேசணும்.. கடமைகளை முடிக்கணும்…அந்த ஆசையிலே தான் வந்திருக்கிறேன்…

  விமலா: சரிங்க டீச்சர்.. கல்லூரி வாசல்லே உங்களை நிக்க வச்சிட்டேன்.. உள்ளே வாங்க.. கேன்டீன்லே ஒரு தே- கோப்பி சாப்பிட்டுட்டு நீங்க நம்ம வீட்டுக்குப் போங்க.. நான் வகுப்புக்குப் போறேன்…

  பத்மா: விமலா பாப்பாவின் கட்டளை.. மறுக்கவா முடியும்?

  ஓடி விளையாடு பாப்பா- நீ

  ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

  கூடி விளையாடு பாப்பா- ஒரு

  குழந்தையை வையாதே பாப்பா…
<
br />   ம்.. எல்லாம் உனக்குத்தான் பொருத்தம்.. ஓயாம நீ படிச்சிக்கிட்டே இருக்கே..ஆனா இப்ப நீ பாப்பா இல்லே.. சீக்கிரமே ஒரு பாப்பாவை நீ… எங்களுக்கு…

  விமலா: போங்க டீச்சர்.. நீங்க கேலி பண்றீங்க.. எனக்கு ரொம்ப….

  பத்மா: வெட்கமா இருக்கு இல்லியா? புரியுது. என்ன செய்யணுமோ அதை நான் செய்தாகணும்.. முதல்லே சூடா ஒரு தேத்தண்ணி..

  விமலா: உக்காருங்க டீச்சர்..

  பத்மா: விமலா, நம்ம அருணைப் பார்த்து ரொம்ப நாளாயிட்டது..வேலையிலே சேர்ந்த பிறகு அருண் ஆபீஸ் வேலையா அடிக்கடி வெளியூர் போய் தங்கிட்டு வர்றதா கேள்விப்பட்டேன்.. அருண் என் பிள்ளை மாதிரி.. பார்க்க ஆசையா இருக்கு…

  விமலா: ம்… பார்க்கலாம்.. பார்க்கலாம்.. வெளியூர் பிராஞ்ச் ஆபிசிலேருந்து அருண் நாளைக்கு வர்றதா கேள்வி.. ஆர்ச்சர்ட் ரோட்ல தான் கம்பெனி ஆபீஸ்.. இதோ.. உங்களுக்கு சூடா தேனீர்.. டீ! சாப்பிடுங்க டீச்சர்…

  பத்மா: இப்ப தேத்தண்ணி.. சீக்கிரமே கலியாண சாப்பாடு.. நான் சொல்றது சரிதானே விமலா..?

 

‹ Prev