Singathology

Home > Other > Singathology > Page 62
Singathology Page 62

by Gwee Li Sui


  விமலா: அருண் தான் அதை முடிவு செய்யணும். பார்க்கத்தானே போறீங்க..

  பத்மா: டீ ரொம்ப நல்லா இருக்கு விமலா.. நடக்கப்போற நல்ல காரியத்துக்கு இது அடையாளம்… அறிகுறி.. இல்லியா?

  விமலா: நீங்க சொன்னா சரிதான்..

  சிரிப்பு..

  காட்சி 5

  அருண், லீலா, பத்மாவதி

  அருண்: லீ..லா..லா.. லா..

  லீலா: லா.. லா… சரியா பேரைச் சொல்லுங்க.. லீலான்னு கூப்பிடுங்க…

  அருண்: சரிங்க லீ லான்.. அழகா தமிழ் பேசுறீங்க..ஆச்சரியமா இருக்கு.. ஆனா ஒரே கம்பத்திலே பிறந்து வளர்ந்தும் நான் சீனம் கத்துக்காம இருந்திட்டேன்..

  லீலா: கவலைப்படுறீங்களா? அதுக்கு அவசியம் இல்லே…

  அருண்: புரியுது..இந்த லீலாகிட்டே கத்துக்க வேண்டியது தான்.. கொஞ்சம் கொஞ்சமா! கொஞ்சம்... கொஞ்சமா!

  லீலா: ம்.. கொஞ்சுறீங்களா?

  அருண்: உன்னைப் பார்த்தா பேச்சு வர மாட்டேங்குது… பார்த்துக்கிட்டே இருக்கலாம் லீலா.. அதுக்கு மேலே..

  லீலா: புரியுது..அப்பவும் இப்பவும் அதே பார்வை. பழைய கம்பத்து உறவு.. அது.. இப்ப.. இப்ப..

  அருண்: காதல் உறவு.. இது பெரிய ரகசியம் இல்லையா?

  லீலா: இல்லை… மத்தவங்களுக்கும் அது இப்ப வெளிச்சம்…

  அருண்: ஆனா என் மாமாவுக்கும் அத்தைக்கும்..

  லீலா: சீக்கிரமே எட்டப்போகுது…

  பத்மாவதி வருகை..

  பத்மா: யாரு..அருணா? பக்கத்திலே ஒரு இளம் பெண். ம்.. பார்த்த முகம் மாதிரி இருக்கே!

  அருண்: டீச்சர் நீங்களா? வாங்க..வாங்க…!

  பத்மா: இவங்க யாரு பக்கத்திலே..?

  லீலா: டீச்சர்.. என்னைத் தெரியிலே.. நல்லா பாருங்க…நான்..

  பத்மா [தனக்குள்]: தமிழ் பேசுற சீன இளம் பெண்.. யாரு? செம்பவாங் ஆங் மகள் லீ லான்! ஆழகான வயசுப் பெண்ணா வளர்ந்துட்டது… [தொடர்ந்து.] செம்பவாங் லீ லானா? லீலா ஆமாங்க டீச்சர் … உங்க லீ லான் தான்!.

  அருண்: உட்காருங்க டீச்சர்.. இங்கே எப்படி வந்தீங்க?

  பத்மா: வரவேண்டிய நேரம்… இங்க தான் உன்னோட தலைமை அலுவலகம்னு நம்ம விமலா சொன்னது. பாக்கலான்னு வந்த இடத்தில் உங்க ரெண்டு பேரையும்… ம்.. லீ லானுக்கும் இங்கே தான் வேலையா..?

  லீலா: பக்கத்திலேயே தான் எனக்கு ஆபீஸ், டீச்சர்!

  பத்மா: இந்த கேண்டீன்லே ரெண்டு பேரும் அப்பப்ப சந்தீப்பீங்க. இல்லியா? விமலாவும் இந்தப் பக்கம் வருமா”

  அருண்: எப்பவாச்சும் விமலா வரும்…

  பத்மா: ம்.. இப்ப புரியிது…

  அருண்: விமலாவைப் பாத்தீங்களா டீச்சர்? வீட்டுக்குப் போனீங்களா? மாமா – அத்தையைப் பாத்தீங்களா?

  பத்மா: பாக்காமே இருப்பேனா? கதை சொல்லாம இருப்பேனா? ஆனா.. இப்ப எல்லாம் புதுக்கதையா மாறிட்டது. இல்லியா?

  அருண்: கதை, நடப்பு எல்லாமே உங்களுக்குத் தெரியும்… பத்மா புரியிது… உங்க பால்ய சிநேகம் இப்ப.. இப்ப.. பக்குவமான உறவா மாறிட்டது.. நான் சொல்றது சரிதானா, லீலா…

  லீலா: போங்க டீச்சர்.. எனக்கு..

  பத்மா: வெட்கமா இருக்கா? உங்க ரெண்டு பேரையும் அளந்து எடுத்திட்டேன்..

  அருண்: உங்க ஆசீர்வாதத்தோட …

  பத்மா: ம்.. பாக்கலாம்.. [தனக்குள்.] இவ்வளவு நடந்திருக்கு.. இதைப் பத்தி சிங்காரத்துக்கும் சிந்தாமணிக்கும் அட்சரம் கூடத் தெரியாம போயிட்டது… ஆனா விமலாவுக்கு மட்டும் வெளிச்சமான விஷயம்.. அந்தரங்கம் அம்பலத்துக்கு வந்தாகணும்.. பாக்கலாம்..

  காட்சி 6

  அருண், விமலா, சிங்காரம், சிந்தாமணி, லீலா, பத்மாவதி தேசிய தினப் பாடல் ஒலிக்கிறது..

  பத்மாவதி: வானொலி தொலைக்காட்சி அறிவிப்புகளை கேட்டுக் கிட்டே உட்கார்ந்திருக்கிறீங்க…

  சிங்காரம்: ஆமாங்க பத்மாவதியம்மா.. தேசிய தின நிகழ்ச்சிகள் ஆச்சே.. பாக்காம., கேட்காம இருக்கவா முடியும்?

  பத்மா: அலையலையா பழைய நினைப்புகள் வருது இல்லியா?

  சிந்தா: ஆமாங்க.. 50 வருஷம் ஆயிட்டதில்லையா… எதை மறக்க முடியும்?

  சிங்கா: ஏகப்பட்ட நடப்பு.. கணக்கு வழக்கு..

  பத்மா: ஆனா.. ஒரு கணக்குக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கலே, இல்லையா? சாமுண்டி கதைக் கணக்கு மாதிரி இப்ப…

  சிங்கா: நீங்க தான் நீதிபதி.. எல்லா விவரமும் இப்ப �
��ங்களுக்குத் தெரியும்.. உங்க தீர்ப்பைச் சொல்லுங்களேன். எல்லாரும் பக்கத்திலேயே தானே இருக்கோம்…

  பத்மா: அதற்கு முன் ஒரு விசாரணை… செம்பவாங் சிங்காரமான நீங்கள். காலமான உங்கள் சகோதரி சாரதாவின் விருப்பத்தை..

  சிங்கா: தங்கச்சி மகன் அருணுக்கு என் மகள் விமலாவை கலியாணம் செய்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால்..அந்த முயற்சி..

  பத்மா: ஏன் வெற்றி பெறவில்லை?.

  சிங்கா: அருணைத் தான் நீங்க கேட்கணும்…

  பத்மா: அருண்… மாமா சொல்றதைக் கேட்டியா..? நீ என்ன சொல்றே?

  அருண்: அம்மாவின் விருப்பப்படி என்னை வளர்த்து ஆளாக்கிய மாமாவுக்கும் அத்தைக்கும் நன்றி.. ஒரே வீட்டில் நானும் விமலாவும் வளர்ந்தோம்.. அதனால்..

  பத்மா: அதனாலே என்ன? முறைப்பெண் விமலாவை திருமணம் செய்து கொள்வது தானே முறை.. அதை நீ ஏன் செய்யலே?

  அருண்: விமலாவைத் தான் நீங்கள் கேட்கணும்…

  பத்மா: விமலா… ஏன் மவுனமா உக்கார்ந்திருக்கே? உன் பதில் என்ன? அத்தான் அருணை உனக்கு பிடிக்கலையா?

  விமலா: அவரை அத்தானா நான் நினைக்கலே. ஒரே வீட்டில் வளர்ந்ததால் அண்ணனைப் போல் பாசத்துடன் அவரோட பழகினேன். அருணும் என்னைத் தங்கையாகவே நினைத்தார்..நாங்க எப்படிங்க தம்பதியாக முடியும்?

  பத்மா: அதனாலே..?

  விமலா: அருணை விரும்பிய செம்பவாங் கம்பத்து தோழி லீ லானை ஊக்கப்படுத்தினேன்.. அருணும் அதை மறுக்கலே..

  பத்மா: அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியாகணும்.. அது தான் உன் விருப்பம்!.இல்லியா விமலா..?

  விமலா: ஆமாங்க… அவங்க விருப்பந்தான் என் விருப்பம்.. அதிலே எனக்கு மனப்பூர்வமான மகிழ்ச்சி..

  பத்மா: ஆனால் உன் அப்பா அம்மாவுக்கு பெரிய அதிர்ச்சி.. எனக்கு ஆச்சரியம்.. அருண்! நீ என்ன சொல்றே?

  அருண்: விமலா சொல்வதெல்லாம் உண்மை…லீ லான் என்னை விரும்பியதால் நானும் விரும்பினேன்.. மாமாவும் அத்தையும் எங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற உறுதியுடன்..

  பத்மா: சிங்காரம்-சிந்தாமணி தம்பதியரே.. லீ லானை இந்த வீட்டு மருமகளாக ஏத்துக்கிறீங்களா? விமலாவும் அருணும் செய்த முடிவை நீங்கள்….

  சிங்கா: நாங்கள்...நாங்கள்… [தயக்கம்.]

  சிந்தா: எப்படிங்க மறுக்க முடியும்? எல்லாருக்கும் விருப்பங்கள் இருக்கு… விமலாவும் அருணும் அவங்க விருப்பத்தைச் சொல்லிட்டாங்க..

  சிங்கா: அவங்க விருப்பத்துக்கு நாங்க தடையா இருக்கவா முடியும்? எல்லாம் நல்லபடியா நடக்கணும்..

  சிந்தா: சரி.. பழைய கம்பத்து லீலானைப் பார்த்து; ரொம்ப நாளாச்சு… எப்ப பாக்கலாம்?

  விமலா: இதோ பாருங்கம்மா… லீலானும் அவங்க அப்பாவும் வந்துட்டாங்க…

  பத்மா: எல்லாம் உன் வேலையா விமலா? நல்லதைத் தான் செய்திருக்கே. வாங்க ஆங்.. வா லீலா… நல்ல நேரத்திலே தான் வந்திருக்கிறீங்க.. உக்காருங்க.. டூடோ லா..!

  ஆங்: திரிமாகசி.. நன்றி. அடா பாய்? எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

  சிங்கா: வாங்க ஆங்.. வாம்மா லீ லா..

  சிந்தா: வாங்க.. உக்காருங்க! லீ லா.. நீ நல்லா இருக்கிறியா கண்ணு.

  லீலா: இருக்கேம்மா..

  விமலா: டீச்சரம்மா.. இந்தாங்க மோதிரம்.. லீலாவும் அருணும் இதை மாத்திக்கட்டும்…

  பத்மா: நல்ல முன்னேற்பாடு தான் செய்துருக்கே விமலா… நீ புத்திசாலிப் பொண்ணாச்சே.. மோதிரங்களை முதல்லே அப்பா அம்மா கையிலே குடு விமலா. ஆங் அங்கிளும் பார்த்ததும் அவங்க ஆசீர்வாதத்தோட இவங்க மோதிரம் மாத்திக்கட்டும்..!

  சிங்கா: நல்ல நேரம்..

  சிந்தா: ஆமாங்க ரொம்ப நல்ல வேளை..

  ஆங்: ரொம்ப சந்தோஷம்..

  பத்மா: அருண்..லீலா.. இங்கே வாங்க.. பெரியவங்க ஆசீர்வதிச்சுட்டாங்க.. ரெண்டு பேரும் மோதிரத்தை மாத்திக் கொள்ளுங்க..

  மங்கல இசை முழக்கம்.

  பத்மா: நம்ம எல்லோருடய விருப்பமும் இப்ப நிறைவேறிட்ட்து.. இன்னொரு மங்கல காரியமும் சீக்கிரமே நம்ம வீட்டிலே நடந்தாகணும்..

  அருண்: ஆமாங்க டீச்சர் நம்ம விமலாவுக்கு நானும் லீலாவும்..

  லீலா: நல்ல மாப்பிளே பார்த்துக்கிட்டிருக்கோம்…சீக்கிரமே விமலாவுக்கும் திரும�
��ம்..

  விமலா: எல்லாரும் சேர்ந்து என்னைக் கேலி பண்றீங்களா?

  பத்மா: கேலியும் இல்லே. கிண்டலும் இல்லே.. உன் விருப்பம் எனக்குத் தெரியும் விமலா.. படிப்பு முடிஞ்சதும் உனக்குக் கலியாணம்..

  சிந்தா: சரி.. எல்லாரும் மேசைப் பக்கம் வாங்க.. விருந்து தயாரா இருக்கு..

  சிங்கா: அருண்.. லீலா.. ஆங் வாங்க இப்புடி..

  விமலா: இது தேசிய தின விருந்து மட்டுமில்லே.. நம்ம வீட்டு நிச்சயதார்த்த விருந்து. வாங்க எல்லாரும்.. வாழ்த்துச் சொல்லுங்க..!

  அனைவரும் சிரித்து மகிழ்கிறார்கள்..

  Desires Twisted

  BY J. M. SALI

  Translated by A. Palaniappan

  VIMALA, a college student

  SINGARAM, Vimala’s father

  CHINTHAMANI, Vimala’s mother

  ARUN, Vimala’s nephew

  PADMA, a former teacher

  LI LAN, a Chinese young lady

  ANG, Li Lan’s father

  Scene 1

  SINGARAM, CHINTHAMANI, ARUN

  CHINTHAMANI: What’s happened to you? You seem to be deep in thought working out something…

  SINGARAM: Yes, Chinthamani. Do you think that there are only one or two things to reckon with?

  CHINTHAMANI: Yes, I know. What is it that you are thinking of right now?

 

‹ Prev